காமராஜரின் 111வது பிறந்தநாளையொட்டி 7 நாட்களுக்கு ‘காமராஜ்’ படத்தின் சிறப்பு காட்சி!…

விளம்பரங்கள்

சென்னை:-காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி, ‘காமராஜ்’ படத்தின் சிறப்பு காட்சி 7 நாட்கள் திரையிடப்படுகிறது. இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில், கடந்த 2004ம் ஆண்டு திரைப்படமாக தயாரித்து வெளியிட்டோம்.

தற்போது 30 நிமிட காட்சிகள் புதிதாக படமாக்கப்பட்டு, அந்த படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவீன வடிவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.காமராஜரின் 111வது பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, ஜூலை 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் திரையிடப்படும்.

இணையப்பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் காமராஜரின் அரசியல் வரலாற்றை தெரிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க, ‘காமராஜ்’ படம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு டைரக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: