செய்திகள்,திரையுலகம் 7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகும் சென்னை 28!…

7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகும் சென்னை 28!…

7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகும் சென்னை 28!… post thumbnail image
சென்னை:-2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான படம் சென்னை 28. எஸ்.பி.பி.சரண் தயாரித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் மூலம் வெங்கட்பிரபு, நடிகர்கள் ஜெய், மிர்சி சிவா, பிரேம்ஜி, விஜய் வசந்த், நடிகை விஜயலட்சுமி ஆகியோர் சினிமாவிற்கு வந்தார்கள்.

இந்தப் படம் 7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. பெங்களூர்-560023 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பிரதீப் ராஜ் இயக்குகிறார். ஜெய் கார்த்திக், துருவ், ராஜீவ், சந்தன், சஞ்சனா, ஷிவானி நடிக்கிறார்கள். இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர்கள். விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி