செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல நடிகை மனோரமாவுக்கு மூச்சுத்திணறல்!…

பிரபல நடிகை மனோரமாவுக்கு மூச்சுத்திணறல்!…

பிரபல நடிகை மனோரமாவுக்கு மூச்சுத்திணறல்!… post thumbnail image
சென்னை:-நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 77 வயது ஆகிறது. 2 வருடங்களுக்கு முன்பு அவருடைய முழங்காலில் பயங்கர வலி ஏற்பட்டது. இதற்காக அவர், ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது குளியல் அறையில் தவறி விழுந்தார்.

அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியபின், அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ம் தேதி தனது 77வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில்,மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும், 2 நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி