செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் யூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை பெற்ற ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்!…

யூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை பெற்ற ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்!…

யூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை பெற்ற ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்!… post thumbnail image
சான் பிரான்ஸிஸ்கோ:-தென் கொரிய நாட்டைச் சேர்ந்த 35 வயது பாப் இசைப்பாடகரான பி.எஸ்.ஒய் எனும் ஜே-சேங் பார்க் பாடகரால் பாடி கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான பாடல் தான் ‘கங்கம் ஸ்டைல்’. உலகில் மூலை முடுக்கெல்லாம் சென்று சக்கை போடு போட்ட அந்த பாடலை இதுவரை யூ-டியூப் வலைத்தளத்தில் 200 கோடி பேர் பார்த்துள்ளனர்.

இந்த பாடல் அந்த அளவுக்கு மக்களிடம் பொய் சேர்ந்துள்ளது என்பதற்கு சாட்சியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை இந்த பாடலை கேட்டதும் எழுந்து நின்று துள்ளாட்டம் போடும் வீடியோக்களும் பேஸ்புக்கில் வெளியாகியிருக்கிறது.தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து வந்த இந்த பாடல் வீடியோ நேற்று முன்தினம் 100 கோடியை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. குதிரையை ஓட்டுவது போன்ற நளினமான இந்த நடன பாடல் பல்வேறு மொழிகளில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை யூடியூபில் 200 கோடி பேரை தாண்டிய ஒரே பாடல் என்ற பெருமையை ‘கங்கம் ஸ்டைல்’ பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரியில் கனடாவை சேர்ந்த பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் பாடிய ‘பேபி’ பாடல் மட்டுமே பில்லியன் வியூ கிளப்பில் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து, ‘கங்கம் ஸ்டைல்’ பாடகர் பி.எஸ்.ஒய் கூறுகையில், ”உங்கள் பாராட்டுக்களுடன் விரைவில் இன்னொரு துள்ளலான பாடலோடு வலம் வருவேன்” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் ‘வால் ஸ்டிரீட்’ பத்திரிகை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்தியில், கங்கம் ஸ்டைலை அடுத்து வரும் 8ம் தேதி ‘ஹேங்க் ஓவர்’ எனும் பாடல் அமெரிக்காவின் ‘ஜிம்மி கிம்மல் லைவ்’ என்ற ‘டாக் ஷோ’வில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது.இது யூ-டியூபில் மட்டும் சாதனையல்ல உலக சாதனை. ஒரே பாடலில் நம் தமிழ் படங்களில் தான் வாழ்க்கை மாறும், ஆனால் இந்த ஒரு பாடலை பாடிய அந்த பாடகரின் வாழ்விலும் மாற்றம் நடந்துள்ளது வியக்கத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி