‘லிங்கா’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ‘நாட்டாமை’, ‘முத்து’, ‘படையப்பா’, ‘ஆதவன்’ என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, விஜய், அஜீத், சிம்பு உள்பட பல ஹீரோக்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோச்சடையான் படத்தின் வெற்றியிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினர். தற்போது ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை இயக்கி வரும் கே.எஸ்.ரவிக்குமார், ‘லிங்கா’ படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு கேக் ஊட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: