செய்திகள்,முதன்மை செய்திகள் வீர மரணம் அடைந்த 8 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம்!…

வீர மரணம் அடைந்த 8 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம்!…

வீர மரணம் அடைந்த 8 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம்!… post thumbnail image
நியூயார்க்:-ஐ.நா. சபையில் சர்வதேச அமைதிப்படை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமைதிப்படையினரின் புதிய நினைவு சின்னத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும், இந்த தினத்தையொட்டி, ஐ.நா. அமைதிப்படையில் இடம் பெற்று பல்வேறு நாடுகளில் பணியாற்றியபோது வீர மரணம் அடைந்த 106 பேருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.அவர்களில் 8 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள். அவர்கள் லெப்டினன்ட் கர்னல் மபால் சிங், லேன்ஸ் நாயக் நந்த் கிஷோர் ஜோஷி, ஹவில்தார் ஹீராலால், நாயிப் சுபேதார் சிவகுமார் பால், ஹவில்தார் பரத் சஸ்மால், சுபேதார் தர்மேஷ் சங்வான், சுபேதார் குமார் பால் சிங் (இவர்கள் தெற்கு சூடானில் நடந்த தாக்குதலில் பலியானவர்கள்), சிப்பாய் ரமேஷ்வர் சிங் (இவர் காங்கோ நாட்டில் ஐ.நா. பணியின்போது வீர மரணம் அடைந்தார்.) ஆவார்கள்.

இவர்களுக்கு ஐ.நா.வின் இரண்டாவது பொதுச்செயலாளர் டாக் ஹம்மார்ஸ்க் ஜோல்டு பெயரிலான பதக்கம், மரணத்துக்கு பிந்தைய நிலையில் வழங்கப்பட்டது.8 இந்திய வீரர்களின் சார்பில் இந்த பதக்கங்களை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி