அரசியல்,செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள்,விளையாட்டு மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட நடிகர் ஷாருக்கான்!…

மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட நடிகர் ஷாருக்கான்!…

மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட நடிகர் ஷாருக்கான்!… post thumbnail image
கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வீட்டுக்கு சென்றார்.

அங்கு மம்தாவை சந்தித்து பேசினார். அப்போது, ஷாருக்கானுக்கு இறுதி போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வாழ்த்து கூறினார்.பின்னர், ஷாருக்கானுக்கு மம்தா பானர்ஜி விருந்து கொடுத்தார். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வறுவல் மீனை சாப்பிட கொடுத்தார்.

விருந்து குறித்து ஷாருக்கான் டுவிட்டரில் கூறும்போது,மம்தா பானர்ஜி வீட்டில் மீன்வறுவல் சாப்பிட்டது இனிமையாக இருந்தது.என்றார்.மம்தா பானர்ஜி பேஸ்புக்கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டியில் வெல்ல வேண்டும். அதற்காக என் வாழ்த்துக்கள்.என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி