செய்திகள்,திரையுலகம் கன்னடத்தில் திரைப்படமாகும் ரஜினி வாழ்க்கை கதை!…

கன்னடத்தில் திரைப்படமாகும் ரஜினி வாழ்க்கை கதை!…

கன்னடத்தில் திரைப்படமாகும் ரஜினி வாழ்க்கை கதை!… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த் வாழ்க்கை கன்னடத்தில் ‘ஒன் வே’ என்ற பெயரில் படமாகயுள்ளது. இந்த படத்தை ஒருவழிச்சாலை என்ற பெயரில் தமிழிலும் கொண்டு வருகின்றனர். ரஜினி சினிமாவுக்கு வருவதற்கு முன் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக பணியாற்றினார். அப்போது அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவரில் முக்கியமானவர் ராஜ்பகதூர்.

ஒரு வழிச்சாலை படத்தை ரஜினிக்கும், ராஜ் பகதூருக்குமான நட்பை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இதில் ரஜினி கேரக்டரில் நடிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ராஜ்பகதூர் வேடத்தில் ராஜ்பகதூரே நடித்து இருக்கிறார். ருஷி இயக்கியுள்ளார். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படம் குறித்து ராஜ்பகதூர் கூறும் போது,ரஜினியிடம் இந்த படம் எடுப்பது பற்றி நேரில் சந்தித்து சொன்னேன். அவரும் உடனே சம்மதம் தெரிவித்தார்.இந்த படத்தை பார்ப்பதற்கு ரஜினி ஆர்வமாக இருக்கிறார். படம் ரிலீசானதும் இருவரும் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும் என்று என்னிடம் கூறி இருக்கிறார் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி