செய்திகள்,விளையாட்டு ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்?…பஞ்சாப்,கொல்கத்தா மோதல்!…

ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்?…பஞ்சாப்,கொல்கத்தா மோதல்!…

ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்?…பஞ்சாப்,கொல்கத்தா மோதல்!… post thumbnail image
பெங்களூர்:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. கடந்த 25ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிந்தது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவிலஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

கடந்த 28ம் தேதி நடந்த ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் கொல்கத்தா அணி 28 ரன்னில் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதே தினத்தில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. நேற்று நடந்த ‘குவாலிபையர்2‘ ஆட்டத்தில் பஞ்சாப் அணி 24 ரன்னில் சென்னை அணியை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதிப்போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. இதில் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்–காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடல்ஸ் அணிகள் மோதுகின்றன.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. 2012ம் ஆண்டு அந்த அணி சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தற்போது 2வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது.

பஞ்சாப் அணி முதல் முறையாக ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் இருக்கிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ராபின் உத்தப்பா, யூசுப்பதான், கேப்டன் காம்பீர், மனிஷ்பாண்டே, ஷகீப் அல்ஹசன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மார்னே மார்கல், உமேஷ் யாதவ் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீரரான சுனில் நரீன் நாட்டுக்காக ஆடுவதை விட ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடுவதை விரும்புகிறார். இதனால் நாளை அவர் ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், மில்லர், கேப்டன் பெய்லி, வோரா, விர்த்திமான் சஹா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஷேவாக் அந்த அணிக்கு புதிய புத்துணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். பந்து வீச்சில் ஜான்சன் முத்திரை பதிப்பார்.

இந்த ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 2 முறையும், பஞ்சாப் ஒரு முறையும் வெற்றி பெற்றன.இரு அணியிலும் சமபலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் சோனி செட் மேக்ஸ், சோனி சிக்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி