பிரமிக்க வைக்கும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள்!…

விளம்பரங்கள்

சென்னை:-அஜித் நடித்த பல படங்களில் சண்டை காட்சிகளின்போது பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். இதனால் அவரது காலில்கூட அறுவை சிகிச்சை செய்தார்.தொடர்ந்து ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆரம்பம், வீரம் படங்களில் சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாத அஜீத், இப்போது நடித்து வரும் தனது 55வது படத்திலும் அதை தொடர்கிறார்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் என்பதால், பைக் மற்றும் ஜீப் சேஸிங் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாம். குறிப்பாக அஜீத் நிஜத்திலும் பைக் ரேசர் என்பதால் பைக்கில் அவர் குற்றவாளிகளை துரத்திப்பிடிகக்கும் காட்சிகளை அதிகமாக புகுத்தியுள்ளாராம் கெளதம்மேனன். அதனால் அந்த காட்சிகளுக்கு தனது பைக் ரேஸ் பைக்கையே பயன்படுத்தியுள்ளாராம்.

சில பைக் சேஸிங் காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டர் சொல்லாத விசயங்களையும் தானே செய்திருக்கிறாராம் அஜீத். அதன்காரணமாக சாதாரணமாக திட்டமிடப்பட்டிருந்த சில சேஸிங் காட்சிகள் அஜீத்தின் இன்வால்ப்மெண்ட் காரணமாக இப்போது இன்னும் பிரமாண்டமாக ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: