பள்ளிகளுக்கு ரூ.720 கோடி நன்கொடை வழங்கிய பேஸ்புக் உரிமையாளர்!…

விளம்பரங்கள்

சான்பிரான்சிஸ்கோ:-‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் உரிமையாளர் மார்க் சூகர்பெர்க். கோடீசுவரர். இவரது மனைவி பிரி சில்லா சான். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள பொது பள்ளிகளுக்கு ரூ.720 கோடி நன்கொடை வழங்குகின்றனர்.

இந்த தகவலை மார்க் சூகர்பெர்க் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி மிகவும் செழிப்பானது. இங்கு பல பள்ளிகள் உள்ளன. ஆனால் அங்கு போதுமான வசதிகள் இல்லை.எனவே அங்குள்ள பள்ளிகளுக்கு தேவையான கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதி போன்றவை செய்து தர இருக்கிறோம். அதற்கு தேவைப்படும் ரூ.720 கோடியை 5 ஆண்டுகளில் வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: