கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசன் நெருக்கம்!…

விளம்பரங்கள்

சென்னை:-சமீபகாலமாக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. தற்போது புதிய ஜோடி ஒன்று சினிமா மற்றும் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து பாலிவுட் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் சித்தார்த்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தற்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் இணைத்து பேசப்படுகிறார் ஸ்ருதி. இருவரும் காதலிப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது ஸ்ருதியும் ரெய்னாவும் நண்பர் ஒருவர் மூலமாக அறிமுகமானார்கள்.

அன்றுமுதல் இருவரும் நெருக்கமான நட்பில் இருக்கின்றனர். இருவரும் பிஸியாக இருந்தபோதும் தனிமையில் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்குகிறார்கள். இது பற்றி இருவரிடமும் கருத்து கேட்க முயன்றபோது இருவரையும் தொடர்புகொள்ள இயலவில்லை. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: