அமிதாப், தனுஷ் இனைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘ஷமிதாப்’!…

விளம்பரங்கள்

மும்பை:-‘சீனிகம், பா’ போன்ற அற்புதமான படங்களை அமிதாப் பச்சனை நாயகனாக வைத்து நடிக்க வைத்த தமிழரான பால்கி அடுத்து இயக்கி வரும் படம்தான் இந்த ‘ஷமிதாப்’. இந்த படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன், தனுஷ் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ஹிந்திப் படத்திற்கு ‘ஷமிதாப்’ என பெயரிட்டிருக்கிறார்கள். அமிதாப் என்ற பெயருக்கு முன்னால், தனுஷ் பெயரில் ஆங்கில எழுத்தில் கடைசி இரண்டு எழுத்தான, ‘எஸ்எச்’ என்ற எழுத்துக்களை இணைத்து இந்த தலைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

மும்பை, கோவா, ஊட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. தனுஷ் இந்த படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாதவராக நடிக்கிறார். இவரது குரலாக அமிதாப் பச்சன் இருக்கிறார். பால்கி,அமிதாப்பச்சன் இணை பாலிவுட்டில் இரண்டு தரமான வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால் இந்த படத்திற்கும் அதிகமாகவே எதிர்பார்ப்பு உள்ளது. பால்கி இயக்கிய முதலிரண்டு படங்களுக்கு இசையமைத்த இளையராஜாதான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு 50 சதவீத அளவிற்கு முடிந்து விட்டது. படத்தை முடித்துவிட்டு அதைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும். தற்போதைக்கு அமிதாப்பின் நடிப்புச் சக்தியையும், தனுஷின் திறமையையும், அக்ஷராவின் அப்பாவித்தனத்தையும் பார்த்து ரசிப்பதில் மகிழ்ச்சியடைந்து வருகிறேன்.என படத்தைப் பற்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் பால்கி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: