செய்திகள்,முதன்மை செய்திகள் ஜூன் 23ம் தேதி பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்!…

ஜூன் 23ம் தேதி பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்!…

ஜூன் 23ம் தேதி பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்!… post thumbnail image
சென்னை:-தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 27ம் தேதி வரை பெறப்பட்டன.

இதையடுத்து ரேண்டம் எண் வரும் 11ம் தேதி வெளியிடப்பட்டு, 16ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.அதன்பின்னர் ஜூன் 23ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூன் 23 மற்றும் 24ம் தேதி விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வும், 25ம் தேதி மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 27ம் தேதி முதல் ஜுலை 28ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தொழிற்பிரிவிற்கு ஜூலை 9 முதல் 20ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி