செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படம் பற்றி இயக்குனர் சௌவுந்தர்யா பேட்டி!…

‘கோச்சடையான்’ படம் பற்றி இயக்குனர் சௌவுந்தர்யா பேட்டி!…

‘கோச்சடையான்’ படம் பற்றி இயக்குனர் சௌவுந்தர்யா பேட்டி!… post thumbnail image
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொனே நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் படம் குறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு:-

உங்களது தந்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து முதல் முறையாக படம் இயக்கியுள்ளீர்கள். இது கனவு நனவான நிகழ்வு போன்றதா?

நிச்சயமாக.அதில் ஒரு சந்தேகமுமில்லை. திரை துறைக்குள் நுழைபவர்கள் தாங்கள் ஒரு படத்திலாவது இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் எனது தந்தை. அதனுடன், நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. எனவே, எனது முதல் படத்தில் அவரை இயக்குவது என்பது உண்மையில் கனவு நனவானது போன்றதே.

அவரை (நடிகர் ரஜினிகாந்த்) உங்களது இயக்கத்தில் நடிக்க வைப்பதற்கு அதிக முயற்சிகள் மேற்கொண்டீர்களா? அல்லது அவர் உடனடியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டாரா?

அவரை படத்தில் நடிக்க வைப்பதற்கு அதிக முயற்சி தேவைப்பட்டது. ஏனென்றால், புதிய தொழில்நுட்பத்தில் படம் உருவாகியுள்ளது. இது எனது முதல் படம். ஆனால், படத்தின் திரைக்கதையை படித்து அது பிடித்து போன பின்னர், என்னால் அதனை கையாள முடியும் என்பதை அறிந்த பின்பே நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். தனது ரசிகர்கள் அவருக்கு மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் வகையிலான ஒரு படத்தை தர அவர் விரும்பினார்.

உங்களது முதல் படத்தில் அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் நடிப்பது ஒரு வரமா-?

நிச்சயமாக. யாரும் அதிகம் அறிந்திராத புதிய தொழில்நுட்பம் கொண்ட படத்தின் மீதான ஆர்வம் காரணமாக எனது தந்தை நடிக்க முன் வந்தார். ரஜினிகாந்த் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க மக்கள் சென்று படத்தை பார்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

படம் ஹிட்டாவது மற்றும் அதற்கு பாராட்டுகள் குவிவது தவிர்த்து இயக்குநராக உங்களது முதல் படத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

ரசிகர்களின் திருப்தி. மக்கள் சென்று படத்தை பார்த்து நாங்கள் எடுத்துள்ள முயற்சியை அறிந்து அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

படப்பிடிப்பில் ஒரு நடிகராக இல்லாமல் சூப்பர் ஸ்டார் மற்றும் ஒரு தந்தை என்ற அளவில் அவரை இயக்கியது உங்களுக்கு எளிதாக இருந்ததா?

முதலில் ஒரு இயக்குநராக இருப்பது என்பது சாதாரணமானது அல்ல. இயக்குநர் தான் ஒரு கப்பலின் கேப்டன். படத்தில் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ, அவை நல்லதோ அல்லது தீயதோ அனைத்தும் இயக்குநரின் செயல்தான். உங்களது கேள்விக்கு நான் வருகிறேன். எனது தந்தையை இயக்கியது சவாலானதுதான். ஏனென்றால் நடிப்பு அவர் தொழில். எனது தந்தை மட்டுமல்ல. படத்தில் மற்ற நடிகர்களை இயக்கியதும் சவாலான ஒன்றாக தான் இருந்தது.

உங்கள் தாயை (லதா ரஜினிகாந்த்) படத்தில் பாட வைத்திருக்கிறீர்கள். அவரை அதற்கு சம்மதிக்க வைக்க அதிகம் சிரமப்பட்டீர்களா?

இல்லை. அவர் ஒரு சிறந்த பாடகர். தனது வாழ்க்கையில் இயல்பான பணிகளை மேற்கொள்வது போன்றுதான் படத்தில் அவர் பாடியுள்ளார். அவர் ஒரு பாட்டி. சூப்பர் ஸ்டாரின் மனைவி மற்றும் எங்களது தாய். சொந்தமாக தனது பள்ளிக்கூடத்தை அவர் நடத்தி வருகிறார். எனவே, பாடுவதற்கு அவருக்கு நேரம் இல்லை. படத்தில் ஒரு பாடல் இருந்தது. அவரது குரல் அதற்கு பொருத்தமாக இருக்கும் என நான் கருதினேன். அது குறித்து ரஹ்மான் சாருடன் பேசியபொழுது அவர் அதிக மகிழ்ச்சி அடைந்தார்.

வருங்காலத்தில் உங்களது படங்களில் அதிகமாக அவரை பாட வைக்க திட்டம் எதுவும் வைத்துள்ளீர்களா?

ஆம். அவர் பாடுவார் என நம்புகிறேன்.

இந்தியாவின் முதல் மோசன் கேப்சர் போட்டோ&ரியாலிஸ்டிக் 3டி அனிமேசன் செய்யப்பட்ட படம் குறித்து அதனை அறிந்திராதவர்கள் எவ்வாறு புரிந்து கொள்வர்?

என்னாலான முயற்சிகளை மேற்கொண்டு ஒவ்வொருவருக்கும் இது குறித்து விளக்கி வருகிறேன். அதனுடன் இந்த படத்தை ஏன் உருவாக்கி உள்ளோம் என்பது குறித்தும் கூறி வருகிறேன். கோச்சடையான் இந்தியாவின் முதல் போட்டோ&ரியாலிஸ்டிக் பெர்பாமன்ஸ் கேப்சர் படம். நம் நாட்டில் இந்த தொழில்நுட்பம் புதிதானது. இது சரியான தருணம் என நான் கருதுகிறேன். படத்தை மக்கள் பார்த்து அது பதிவான பின்பு அது குறித்து அதிகம் படித்து தெரிந்து கொள்வார்கள்.

இந்தியாவில் அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானதாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த தவறான நம்பிக்கையை கோச்சடையான் படம் தகர்க்கும் என கருதுகிறீர்களா?

நான் நம்புகிறேன். அதனுடன் அனிமேஷன் புதிய முறையில் படங்கள் உருவாகும் ஊடகமாக உள்ளது. அது போன்ற பல படங்கள் நம் நாட்டில் உருவாகியும் உள்ளன.

பாலிவுட்டில் உள்ள ஒவ்வொருவரும் கோச்சடையானுக்கு பலத்த ஆதரவை வழங்கியுள்ளனர். பட இசை வெளியீட்டில் ஷாருக் கானும், இந்தி டிரெய்லர் வெளியீட்டில் அமிதாப் பச்சனும் அதனை வெளிப்படுத்தினர். நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

அதனை பெருமையாக உணர்கிறேன். அவர்கள் தொழில் நுட்பத்தை அறிந்தவர்கள். எனவே, அவர்கள் இந்த பணியை பாராட்டும்பொழுது, அது முற்றிலும் பெரியதொன்றாக உள்ளது.

இந்த படத்திற்கு தீபிகா படுகொனே எவ்வாறு பொருத்தமானவராக இருந்தார்?

அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். வந்தனா தேவி என்ற இளவரசியின் கதாபாத்திரத்தை அவர் ஏற்றுள்ளார். அவரிடம் கூறிய தொழில் நுட்ப விவரத்தை மிக விரைவாக புரிந்து கொண்டார். அவரது காட்சிகள் அடங்கிய படப்பிடிப்பு இரு நாட்களில் முடிந்து விட்டது. படத்தில் உள்ள நடன காட்சிகள் அனைத்தையும் அவரே செய்துள்ளார்.

ஷாருக் கானின் ரா ஒன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். கோச்சடையான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஷாருக் கானை நீங்கள் ஏன் அணுகவில்லை?

கதைக்கு என்ன தேவையோ அதனுடன் நாங்கள் ஒன்றி போய் விட்டோம் என நான் நினைக்கிறேன். ஷாருக் கானுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் கனவொன்று நனவான நிகழ்வாகவே அது இருக்கும்.

கோச்சடையான் என்றால் அரசன். உங்களது தந்தை இந்த படத்திற்கும் மற்றும் தலைப்பிற்கும் மிக பொருத்தமானவராக உள்ளார். உங்களது கருத்துபடி, இந்த படத்திற்கு பொருத்தமானவராக வேறு எந்த நடிகர் இருப்பார்?

யாரும் இல்லை. வேறு ஒருவரையும், கோச்சடையான் படத்தில் எனது தந்தை நடித்தது போன்று என்னால் பார்க்க முடியவில்லை.

இவ்வாறு இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி