இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் நடத்திய ஆய்வில் 1980 மற்றும் 2012க்களுக்கு இடையே நடந்த ஆய்வில் 187 நாடுகளில் புகை பிடிக்கும் பழக்கம் ஆண்களில் 23 சதவீதமாகவும் பெண்கள் மத்தியில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் பெண்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

புகைபிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்படும் மற்றும் மலட்டு தன்மை அதிகரித்தும் பெண்களுக்கு இது எதிராக அமைந்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சீனாவில் தான் புகைப்பிடிப்பவர்களில் பெண்கள் அதிகமாக காணப்படுகின்றனர் என்று சர்வேயில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் தான் பெண்கள் அதிக அளவில் புகைப்பிடிப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 20 வயது முதல் 25 வயதுக்குள் உள்ள பெண்கள் தான் அதிக அளவில் புகைப்பிடிக்கிறார்கள் என்று அமெரிக்காவில் உள்ள சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் புகைப்பிடிக்கும் பெண்கள் 18.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று சர்வேயில் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: