அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஸ்மிருதி இரானிக்கு நடிகை குஷ்பு ஆதரவு!…

ஸ்மிருதி இரானிக்கு நடிகை குஷ்பு ஆதரவு!…

ஸ்மிருதி இரானிக்கு நடிகை குஷ்பு ஆதரவு!… post thumbnail image
சென்னை:-நடிகை குஷ்பு தி.மு.க.வில் பேச்சாளராக இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பாரதீய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.இந்நிலையில் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய வெளியுறவு துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜை குஷ்பு டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.

சுஷ்மாஜி, தங்களுக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தைரியம் மற்றும் சீரிய முயற்சியால் அந்நிய சக்திகள் வாலாட்ட முடியாது. நீங்கள் சிறப்பான சேவையாற்றுவீர்கள். வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இது போல் கல்வி தகுதி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி ராணிக்கும் குஷ்பு ஆதரவு தெரிவித்து உள்ளார்.ஸ்மிருதி இரானிக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டார்.ஸ்மிருதி இரானி மந்திரியானதை காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய்மாகன் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். பள்ளி படிப்பை மட்டும் முடித்தவருக்கு உயர் கல்வியை கண்காணிக்கும் மனித வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் குறை கூறி யுள்ளார்.

குஷ்பு இதுகுறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டு உள்ளார். அவர் கூறும் போது, ஸ்மிருதி இரானி கல்வி தகுதியை பற்றி விமர்சிக்கப்படுகிறது. சாதிப்பதற்கு கல்வி தகுதி அவசியம் இல்லை. சச்சின் தெண்டுல்கர் பில்கேட்ஸ், ரஜினி, கமல், உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் அல்ல. திறமைதான் முக்கியம் படிப்பு முக்கியம் அல்ல என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி