செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி!…

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி!…

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி!… post thumbnail image
கொல்கத்தா:-பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதிய ஐ.பி.எல். குவாலிபையர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பீல்டிங் தேர்வு செய்தார்.கொல்கத்தா அணியைச் சேர்ந்த உத்தப்பா- காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். காம்பீர் 1 ரன் எடுத்த நிலையில் ஜான்சன் பந்தில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரது கேட்சை மிட்ஆன் திசையில் நின்ற பெய்லி அருமையாக துள்ளி பிடித்தார்.

அடுத்து உத்தப்பாவுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக விளையாடிய உத்தப்பா அதன்பின் அதிரடி காட்டினார். 30 பந்தில் 42 ரன் எடுத்திருந்த உத்தப்பா அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் மணீஷ் பாண்டே 21 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது கொல்கத்தா அணி 8.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன் எடுத்திருந்தது.4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாகிப் அல் ஹசன்- யூசுப் பதான் ஜோடியும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அல் ஹசன் 18 ரன்னிலும், பதான் 20 ரன்னிலும் கரன்வீர் சிங் பந்தில் ஆட்டம் இழந்தனர்.அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 14 பந்தில் 20 ரன்னும், ரியான் டென் டஸ்கொதே 17 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். கடைசியாக வந்த சாவ்லா 17 ரன் எடுக்க கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் கரண்வீர் சிங் 3 விக்கெட்டும், ஜான்சன், அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. மழை அடிக்கடி மிரட்டியதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி தோல்வி அமையுமோ என இரண்டு அணி வீரர்களும் விளையாடினார்கள்.கொல்கத்தா அணி சிறந்த பவுலர்களான மோர்கல், உமேஷ் யாதவ், நரைன் ஆகியோரை தொடக்கத்திலேயே அதிக ஓவர் வீச பயன்படுத்தியது. இதனால் பஞ்சாப் அணி வீரர்கள் அவசரப்பட்டு முதலிலேயே விக்கெட் இழந்தனர்.இதனால் அந்த அணியால் இழக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக சகா 31 பந்தில் 35 ரன் எடுத்தார். கொல்கத்தா அணி சார்பில் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

KOL – Inning

Batsman R B M 4s 6s S/R
Uthappa R. c Miller D. A. b Patel A. 42 30 41 4 2 140.00
Gambhir G. c Bailey G. b Johnson M. 1 3 6 0 0 33.33
Pandey M. b Patel A. 21 20 38 3 0 105.00
Al Hasan S. c Miller D. A. b Singh K. 18 16 30 2 0 112.50
Pathan Y. c Miller D. A. b Singh K. 20 18 29 2 1 111.11
ten Doeschate R. c Vohra M. b Johnson M. 17 10 43 0 2 170.00
Yadav S. b Singh K. 20 14 37 3 1 142.86
Chawla P. not out 17 9 14 3 0 188.89
Narine S. run out Johnson M. 0 0 8 0 0 0
Morkel M. not out 0 0 2 0 0 0
Extras: (w 3, lb 4) 7
Total: (20 overs) 163 (8.2 runs per over)
Bowler O M R W E/R
Awana P. 3.6 0 33 1 9.17
Johnson M. 3.6 0 31 2 8.61
Patel A. 3.6 1 11 2 3.06
Dhawan R. 3.6 0 44 0 12.22
Singh K. 3.6 0 40 3 11.11

KIN – Inning

Batsman R B M 4s 6s S/R
Johnson M. not out 10 11 19 0 1 90.91
Patel A. run out Chawla P. 2 2 12 0 0 100.00
Dhawan R. st Uthappa R. b Al Hasan S. 14 15 14 0 1 93.33
Singh K. not out 1 1 11 0 0 100.00
Sehwag V. c Al Hasan S. b Yadav U. 2 3 4 0 0 66.67
Vohra M. c Yadav U. b Morkel M. 26 19 24 0 3 136.84
Saha W. c Yadav U. b Morkel M. 35 31 49 2 2 112.90
Maxwell G. lbw Yadav U. 6 9 9 1 0 66.67
Miller D. A. b Chawla P. 8 12 23 0 0 66.67
Bailey G. c Pandey M. b Yadav U. 26 17 31 1 2 152.94
Extras: (w 2, lb 3) 5
Total: (20 overs) 135 (6.8 runs per over)
Bowler O M R W E/R
Al Hasan S. 3.6 0 43 2 11.94
Chawla P. 3.6 0 23 1 6.39
Narine S. 3.6 0 30 0 8.33
Morkel M. 3.6 0 23 2 6.39
Yadav U. 3.6 0 13 3 3.61

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி