பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்க்கு கோர்ட் சம்மன்!…

விளம்பரங்கள்

தெஹ்ரான்:-சமூக வலை தளமான பேஸ்புக் தனி நபரின் சுதந்திர தன்மையை பாதிப்பதாக வந்த புகாரையடுத்து அதன் நிறுவனரும் தலமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க்க்கு இரான் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.இது குறித்த செய்தியை அங்குள்ள செய்தி நிறுவனமான இஸ்னா வெளியிட்டுள்ளது.

அதில், பேஸ்புக் நிறுவனத்தில் கிளை நிறுவனமான இன்ஸ்டகரம் மற்றும் வாட்ஸ் அப் போன்றவைகள் தனிநபர் உரிமைகளை பாதிப்பதாக சிலர் அளித்துள்ள புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றொரு ஈரானிய கோர்ட் கடந்த வாரம் இன்ஸ்டகராம் என்ற அப்பிளிகேஷனை தடை செய்து உத்தரவிட்டது. இருப்பினும் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட சில இடங்களில் செவ்வாய் கிழமை மதியம் வரை அதை பயன்படுத்த முடிந்தது என கூறப்படுகிறது.

இதனிடையே, பேஸ்புக் ஏற்கனவே அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அது மட்டும் அல்லாது டிவிட்டர், யூடூப் மற்றும் மொபைல் அப்பிளிகேஷென் உள்ளிட்டவைகளையும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வெளியுறவு துறை மந்திரி முகம்மது ஜாவாத் சாரிப் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் அதில் இயங்கி வருகின்றனர். மேலும் பல ஈரனியர்கள் தடை செய்யப்பட்ட இணையதளம் மற்றும் அப்பிளிகேஷன்களை இயக்க மாற்று சர்வர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: