அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மந்திரிசபையில் புதிய மந்திரிகள் இலாகா விவரம்!…

மந்திரிசபையில் புதிய மந்திரிகள் இலாகா விவரம்!…

மந்திரிசபையில் புதிய மந்திரிகள் இலாகா விவரம்!… post thumbnail image
புதுடெல்லி:-நரேந்திர மோடி தலைமையில் 46 மந்திரிகளை கொண்ட புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடந்தது.முதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். மோடியை தொடர்ந்து 45 மந்திரிகள் பதவி ஏற்றனர்.

புதிய மந்திரிகளுக்கு என்னென்ன இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விபரம் நேற்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதவி ஏற்றதும், பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரிகளுடன் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதால் உடனடியாக இலாகா பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.இதனால் புதிய மந்திரிகளுக்கு ஒதுக்கப்படும் இலாகா பற்றிய எதிர்பார்ப்பு நாடெங்கும் நிலவியது. நேற்றிரவு தொலைக்காட்சிகளில் அதிகாரப் பூர்வமற்ற உத்தேச இலாகா ஒதுக்கீடு தகவல்கள் வெளியானது.இன்று காலை நரேந்திர மோடி பிரதமர் அலுவலகத்துக்கு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கிய பிறகுதான் புதிய மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதிய மந்திரிகளுக்கான இலாகா விவரம் வருமாறு:–

பிரதமர் நரேந்திர மோடி– அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலத்துறை, பென்ஷன், குறை தீர்ப்பு.

1. ராஜ்நாத்சிங் – உள்துறை.

2. சுஷ்மா சுவராஜ் – வெளியுறவுத்துறை

3. அருண்ஜேட்லி – நிதி மற்றும் ராணுவத்துறை, கார்ப்பரேட் விவகாரம்

4. வெங்கையா நாயுடு – நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு, பாராளுமன்ற விவகாரம்.

5. நிதின்கட்காரி– போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை.

6. சதானந்த கவுடா – ரெயில்வே

7. உமாபாரதி – நீர்வளம், கங்கை சுத்திகரிப்பு

8. நஜ்மா ஹெப்துல்லா – சிறுபான்மையினர் விவகாரம்.

9. கோபிநாத் முண்டே – ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்.

10. ராம்விலாஸ் பஸ்வான் – உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலன்.

11. கல்ராஜ் மிஸ்ரா– நடுத்தர, சிறு தொழில்.

12.மேனகாகாந்தி – பெண்கள், குழந்தைகள் நலம்.

13. அனந்தகுமார் – உரம் மற்றும் ரசாயணம்

14. ரவிசங்கர் பிரசாத் – தொலைத் தொடர்பு மற்றும் தகவல் துறை

15. அசோக் கஜபதி ராஜு – விமான போக்குவரத்து

16. ஆனந்த் கீதே – தொழில் துறை.

17. ஹர்சிம்ரத் கவுர் – உணவு பதப்படுத்துதல்.

18. நரேந்திர சிங் தோமர் – சுரங்கம் மற்றும் இரும்புத் துறை தொழிலாளர் – வேலை வாய்ப்பு.

19. ஜுவல் ஓரம் – மலை வாழ் மக்கள் நலத்துறை

20. ராதாமோகன்சிங் – விவசாயம்

21. தவாரி சந்த் கெலாட் – சமூக நீதி

22. ஸ்மிருதி இரானி – மனிதவளம் மேம்பாடு

23. ஹர்ஷ் வர்தன் – சுகா தாரம்

ராஜாங்க மந்திரிகள் (தனி பொறுப்பு)

1. தளபதி வி.கே.சிங் – வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு வெளியுறவுத் துறை

2. ராவ் இந்தர்ஜித்சிங் – திட்டம், புள்ளியல், திட்ட அமலாக்கம், ராணுவம்.

3. சந்தோஷ் கஸ்வார் – ஜவுளி, நீர் வளம், நதி மேம்பாடு, கங்கை சுத்திகரிப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரம்

4. ஸ்ரீபாத் எஸ்சோ நாயக் – சுற்றுலா மற்றும் கலாச்சாரம்.

5. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

6. சர்பனந்த சோனாவால் – பட்டு ஜவுளி மேம்பாடு, தொழில் முனைவோர் நலம், விளையாட்டு.

7. பிரகாஷ் ஜவடேகர் – தகவல் ஒளிபரப்பு சுற்றுச் சூழல், வனத்துறை, இயற்கை மாற்றம் (தனி பொறுப்பு), பாராளுமன்ற விவகாரம்.

8. பியூஸ் கோயல் – மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் மாற்று எரிசக்தி.

9. ஜிதேந்திர சிங் – அறிவியல் தொழில் நுட்பம், பிரதமர் அலுவலகம், பென்சன் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு, விண்வெளி மற்றும் அணுசக்தி.

10. நிர்மலா சீதாராமன்– வர்த்தகம் மற்றும் தொழில் (தனி பொறுப்பு) நிதி, கார்ப்பரேட் விவகாரம்.

1. சித்தேஸ்வரா – விமான போக்குவரத்து

2. மனோஜ் சின்கா – ரெயில்வே

3. நிகல் சந்த் – ரசாயணம் மற்றும் உரம்

4. உபேந்திர குஷ்வாகா – ஊரக மேம்பாடு, பஞ்சாயத் ராஜ், குடிநீர்.

5. பொன்.ராதாகிருஷ்ணன் – கனரக தொழில் மற்றும் பொதுத் துறை, அரசுத் துறை தொழில்கள்.

6. கிரண் ரிஜ்ஜு – உள்துறை

7. கிரிஷன் பால்குஜ்ஜார் – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்.

8. சஞ்சீவ்குமார் பல் யாண்– வேளாண், உணவு பதப்படுத்துதல் தொழில்.

9. மன்சுக்பாய் – மலைவாழ் மக்கள் நலம்.

10. ராவ் சாகிப் தாதாராவ் தன்வே – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம்.

11. விஷ்ணு தேவ் சாய் – சுரங்கம், இரும்பு, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு.

12. சுதர்சன் பகத் – சமூக நீதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி