செய்திகள் நாளையுடன் அக்னி வெயில் முடிவு!…

நாளையுடன் அக்னி வெயில் முடிவு!…

நாளையுடன் அக்னி வெயில் முடிவு!… post thumbnail image
சென்னை:-கோடை வெயில் இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி வாட்டி எடுத்தது. கடந்த 4ம் தேதி அக்னி வெயில் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையானது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

அனைத்து மாவட்டங்களிலும் அனல் காற்றுடன் வெப்பம் வாட்டுகிறது. நேற்று சென்னை, மதுரை, கரூர், பரமத்தி, திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை ஆகிய 6 இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.சுட்டெரிக்கும் அக்னி வெயில் நாளையுடன் முடிகிறது. அதன்பிறகு வெயிலின் அளவு படிப்படியாக குறையும்.ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென் மேற்கு பருவமழை காலமாகும். நாட்டின் 75 சதவீத மழை பொழிவு தென் மேற்கு பருவமழை காலத்தை நம்பியே உள்ளது.

ஆண்டு தோறும் மே 20ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கும். இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே கடந்த 18ம் தேதியே தொடங்கிவிட்டது.இதன் தொடர்ச்சியாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி