செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படத்தை பாராட்டிய கமல்!…

‘கோச்சடையான்’ படத்தை பாராட்டிய கமல்!…

‘கோச்சடையான்’ படத்தை பாராட்டிய கமல்!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் இந்திய படம் என்பதால் இப்படத்தை பார்க்க நடிகர்,நடிகைகள் ஆரவமாக இருக்கிறார்கள்.

கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தார். தற்போது சென்னை திரும்பியுள்ள அவருக்கு கோச்சடையான் படம் பிரத்யோகமாக திரையிட்டு காட்டப்பட்டது.ராயப்பேட்டையில் உள்ள ரியல் இமேஜ் பிரிவியூ தியேட்டரில் கமல்ஹாசன் படத்தை பார்த்தார். அவருடன் நடிகர்கள் ரமேஷ் அரவிந்த், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ஊர்வசி, கவுதமி, பூஜாகுமார், லிசி பிரியதர்ஷன் போன்றோரும் படம் பார்த்தனர்.

படம் முடிந்த பிறகு ‘கோச்சடையான்’ டைரக்டர் சவுந்தர்யாவை கமல் பாராட்டினார். நடிகர் அஜித்தும் ‘கோச்சடையான்’ படம் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சனும் ‘கோச்சடையான்’ படத்தின் இந்தி பதிப்பை ஓரிரு தினங்களில் பார்க்க இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி