அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சரானார் சுஷ்மா சுவராஜ்!…

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சரானார் சுஷ்மா சுவராஜ்!…

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சரானார் சுஷ்மா சுவராஜ்!… post thumbnail image
புதுடெல்லி:-மோடி தலைமையிலான அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக 62 வயதன சுஷ்மா சுவராஜ் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இது மட்டும் அல்லாது, ஹரியானா அரசின் குறைந்த வயது மந்திரி,டெல்லியின் முதல் பெண் முதல் மந்திரி மற்றும் பாஜக மட்டும் அல்லாது எந்த ஒரு கட்சிக்கும் நியமிக்கப்பட்ட முதல் செய்தி தொடர்பாளர் என்ற பெருமையை அவர் ஏற்கனவே பெற்றுள்ளார்.வெளியுறவு துறை அமைச்சராக தனது பணிகளை சுஷ்மா சுவராஜ் இன்று தொடங்கினார். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் அவர் முன் உள்ளன.

1977 ஆம் ஆண்டு ஹரியானாவில் கல்வி துறை மந்திரியாக 25 வயதில் சுஷ்மா சுவராஜ் பதவியேற்றார். சட்டம் பயின்றுள்ள சுஷ்மா சுவராஜ் சுப்ரீம் கோர்ட்டில் பயிற்சி பெற்றுள்ளார். 7 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி