செய்திகள்,திரையுலகம் விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…

விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…

விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!… post thumbnail image
சென்னை:-ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கத்தி’. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தைப் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.தீபாவளி அன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள்.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துவிட்டார் அனிருத்.இதில் ஒரு பாடலை தனுஷ் எழுதுகிறார். அந்தப் பாடலை விஜய் பாடுகிறார்.

விஜய் பிறந்தநாள் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி வருகிறது. இதனால் ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இதை உறுதி செய்துள்ளார். தன் ட்விட்டர் தளத்தில், ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 22 அன்று வெளிவர உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி