செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் மோதல்!…

படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் மோதல்!…

படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் மோதல்!… post thumbnail image
சென்னை:-நடிகைகள் தமன்னா, பிபாசாபாசு இருவரும் ‘ஹம்சகல்’ என்ற இந்தி படத்தில் நடிக்கின்றனர். சயீப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக் நாயகர்களாக நடிக்கிறார்கள்.படப்பிடிப்பில் தமன்னா எல்லோரிடமும் சகஜமாக பழகினார்.

இது படக்குழுவினரை கவர்ந்தது. தமன்னாவுக்கு அவர்கள் மரியாதை கொடுத்தனர். அவருக்கு தேவையான உதவிகளையும் செய்தார்கள்.இது பிபாசா பாசுவை கடுப்பேற்றியது. இந்தியில் தமன்னாவைவிட நான்தான் பெரிய நடிகை எனக்கு தான் முதல் மரியாதை வேண்டும் என்று எரிந்து விழுந்தார். தமன்னாவிடமும் அவரது ஆத்திரம் திரும்பியது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டதாக இந்தி பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகைகள் இந்தியில் பிரபலமாவது அங்குள்ள நடிகைகளுக்கு பிடிக்கவில்லை. அசினை விரட்ட கடும் முயற்சிகள் எடுக்கிறார்கள். படவாய்ப்புகளையும் தடுக்கின்றனர். இதுவே தமன்னா, பிபாசாபாசு மோதலுக்கு காரணம் என்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி