செய்திகள்,திரையுலகம் கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விவேக்!…

கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விவேக்!…

கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விவேக்!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் கவுண்டமணி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர் 26ம் வயது முதலே திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தொடக்க காலங்களில் தனியாகவே நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கவுண்டமணி, பின்னர் செந்திலுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

கவுண்டமணி இதுவரை சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மேலும் வில்லன், குணச்சித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் இன்று தன்னுடைய 75வது பிறந்தாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பிறந்தநாளையொட்டி காமெடி நடிகர் விவேக் கவுண்டமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி