செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!… post thumbnail image
மும்பை:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும். டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், சாம்சனும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வாட்சன் பந்துகளை சந்திக்க திணறி வந்தார். ஹர்பஜன் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில் 18 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வாட்சன் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு கருண் நாயர் சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மும்பை பந்துவீச்சை இருவரும் எல்லைக்கோட்டிற்கு விரட்டி ரன்களை குவித்தனர்.

கோபால் வீசிய ஆட்டத்தின் 11வது ஓவரில் நாயர் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரிகள் அடித்து கலக்கினார். அதே போல் ஓஜா வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரிலும் நாயர் மீண்டும் ஒரு சிக்சர் இரு பவுண்டரிகள் அடித்தார். அதிரடியாக ஆடி வந்த நாயர் பும்ராஹ் வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரில் சிம்மன்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே சாம்சனும் 74 ரன்களுக்கு அவுட்டானார். இவரது ஸ்கோரில் 3 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.பின்னர் ஹாட்ஜும் பால்க்னரும் ஜோடி சேர்ந்து ஆடி வந்தனர். ஹர்பஜன் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் பால்க்னர் 2 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார். அதே ஓவரில் ஹாட்ஜும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார். இருவரும் அடித்து ஆடி ரன்களை குவித்துக் கொண்டிருந்தபோது பொல்லார்டு வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 23 ரன்களை எடுத்திருந்த பால்க்னர் அவுட்டானார். கடைசி பந்தில் ஹாட்ஜ் பவுண்டரி விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அணியின் ஸ்கோர் 189 ரன்களை எட்டியது.

வெற்றிக்கு 190 ரன்கள் தேவை என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்சும், ஹசியும் களமிறங்கினர். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் மும்பை அணி 14.4 ஓவரில் 193 ரன்களை எடுத்து வெற்றிபெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆட முற்பட்டனர். இதனால் சிம்மன்ஸ் 12 ரன்களுக்கும், ஹசி 22 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினார்கள்.3வது விக்கெட்டுக்கு ஆண்டர்சனும், 4வது விக்கெட்டுக்கு பொல்லார்டும் களமிறங்கினர். ஆண்டர்சன் ராஜஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். பந்துகளை சிக்சர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் விளாசி ரன்களை குவித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. பொல்லார்டு 7 ரன்களுக்கும், ரோகித் ஷர்மா 16 ரன்னிலும் நடையை கட்டினர். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்பாதி ராயுடு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் இணைந்து ராஜஸ்தான் பந்துவீச்சை பவுண்டரிக்கும், சிக்சர்களுக்கும் விளாசி ரன்களை சேர்த்தனர். 10 பந்துகளை சந்தித்து 30 ரன்களை குவித்த ராயுடு துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாக அப்போது 14.3 ஓவர்கள் முடிந்திருந்தது. அணியின் ஸ்கோர் 189 ரன்களை எட்டி சமநிலையில் இருந்தது. 14.4வது பந்தில் பவுண்டரி அடித்தால் மும்பையும், வைடு பால் போட்டால் 190 ரன்களை எடுத்து மும்பை வெற்றி பெற்றால் ராஜஸ்தானும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. இதனால் மைதானமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.பால்க்னர் வீசிய 14.4வது பந்தில் டரே சிக்சர் விளாசி மும்பை அணியை வெற்றி பெற வைத்ததுடன் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற வைத்தார். 44 பந்துகளில் 95 ரன்களை குவித்த ஆண்டர்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகனாகவும் ஆண்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

RAJ – Inning

Batsman R B M 4s 6s S/R
Watson S. c Pollard K. b Singh H. 8 18 22 1 0 44.44
Samson S. c Singh H. b Gopal S. 74 47 69 7 3 157.45
Nair K. c Simmons L. b Bumrah J. 50 27 44 7 2 185.19
Hodge B. not out 29 16 26 2 1 181.25
Faulkner J. c Anderson C. b Pollard K. 23 12 19 0 3 191.67
Cooper K. not out 0 0 4 0 0 0
Extras: (w 3, lb 2) 5
Total: (20 overs) 189 (9.5 runs per over)
Bowler O M R W E/R
Anderson C. 1.6 0 14 0 8.75
Bumrah J. 3.6 1 30 1 8.33
Ojha P. 3.6 0 31 0 8.61
Singh H. 3.6 0 43 1 11.94
Gopal S. 2.6 0 36 1 13.85
Pollard K. 2.6 0 33 1 12.69

MUM – Inning

Batsman R B M 4s 6s S/R
Anderson C. not out 95 44 87 9 6 215.91
Pollard K. c Hodge B. b Cooper K. 7 3 4 0 1 233.33
Simmons L. c Faulkner J. b Kulkarni D. 12 8 7 3 0 150.00
Hussey M. b Cooper K. 22 11 22 1 2 200.00
Sharma R. c Nair K. b Kulkarni D. 16 11 24 1 1 145.45
Rayudu A. run out Nayar A. 30 10 35 5 1 300.00
Tare A. not out 6 1 9 0 1 600.00
Extras: (w 4, lb 3) 7
Total: (14.4 overs) 195 (13.3 runs per over)
Bowler O M R W E/R
Watson S. 1.6 0 33 0 20.63
Faulkner J. 3.5 0 55 0 15.71
Cooper K. 3.6 0 40 2 11.11
Kulkarni D. 2.6 0 39 2 15.00
Tambe P. 1.6 0 25 0 15.63

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி