நடிகர் சந்தானத்தின் மிருகம் பேச்சால் பரபரப்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-காமெடி நடிகனாக நடிக்கும் படங்களின் பிரமோஷனுக்காக எந்த பத்திரிகையாளர் சந்திப்பு, டிவி பேட்டி என எதற்கும் வராத சந்தானம், தான் ஹீரோவாக நடித்த படத்தை ஓட வைக்க ஊர் ஊராக சுற்றி வந்தார் என்பதை தமிழ்த் திரையுலகம் ஆச்சரியத்துடனும், ஆத்திரத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவர் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்ததே சிவகார்த்திகேயனால்தான் என்ற ஒரு பேச்சும் இருந்து வருகிறது. தன்னைப் போலவே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவாக வளர்ந்ததைக் கண்டு சந்தானத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். அதனால்தான் அவரும் ஹீரோவானார் என்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் சிவகார்த்திகேயனைப் பற்றி பேசிய சந்தானம், உதாரணத்திற்காக காடு, மிருகம் என காமெடியாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சீரியசாகப் பேசியிருக்கிறார்.எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில எந்த போட்டியும் கிடையாது. கமல் சார் ஒரு முறை சொல்லியிருக்கிறாரு. சினிமாங்கறது காடு மாதிரி. அதுல இருக்கிற எல்லாருமே மிருகங்க மாதிரி, அது அது வேலையைப் பார்க்கிற மாதிரி, நானும் என் வேலையைப் பார்த்திட்டிருக்கேன்,என்று பேசியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: