காந்தி நினைவிடத்தில் மோடி அஞ்சலி!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அங்கிருந்து காரில் ஏறிய மோடி, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இல்லம் செல்கிறார்.

அவரிடம் ஆசி வாங்கிய பின்னர், புதிதாக பொறுப்பேற்கவுள்ள மந்திரிகளின் பட்டியலை ஜனாதிபதியிடம் அவர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின்னர், இன்று மாலை 6 மணியளவில் ஜனாதிபதி மாளிகையின் திறந்தவெளி திடலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் மோடி மற்றும் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைப்பார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: