செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினியுடன் மீண்டும் இணைவது பெருமை என சந்தானம் பேட்டி!…

ரஜினியுடன் மீண்டும் இணைவது பெருமை என சந்தானம் பேட்டி!…

ரஜினியுடன் மீண்டும் இணைவது பெருமை என சந்தானம் பேட்டி!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். இரு வேறு கால கட்டங்களில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக எடுக்கின்றனர்.

இதில் மூத்த ரஜினியுடன் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இளம் ரஜினியுடன் நடிக்க சந்தானத்திடம் பேசி வந்தனர். தற்போது அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை டுவிட்டரில் சந்தானமே வெளிப்படுத்தி உள்ளார்.ரஜினியுடன் நடிப்பது பெருமையான விஷயம் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. அது நிறைவேறினால் நான் பெரிய அதிர்ஷ்டசாலி என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி