அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! …

தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! …

தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! … post thumbnail image
நகரி :- ஆந்திராவில் இருந்து பிரிந்து இந்தியாவின் 29–வது மாநிலமாக உருவாகியுள்ள தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்–மந்திரியாக டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் பதவி ஏற்கிறார். முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தெலுங்கானா மாநிலம் ஜூன் 2–ந்தேதி அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது. அன்றைய தினமே சந்திரசேகரராவ் முதல்– மந்திரியாக பதவி ஏற்கிறர். அவருடன் 15 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. பதவி ஏற்புக்கான நேரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே புதிய பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26–ந்தேதி பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் சந்திரசேகரராவ் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நாளை டெல்லி செல்கிறார். பின்னர் தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து தனது எம்.பி. பதவிக்கான ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்.

நடந்த முடிந்த தேர்தலில் சந்திரசேகரராவ் கஜ்வேல் சட்டசபை தொகுதியிலும், மெடக் பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு 2 தொகுதியிலும் வெற்றி பெற்றார். முதல்–மந்திரியாக பதவி ஏற்க இருப்பதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார்.

இதேபோல் சீமாந்திரா முதல்–மந்திரியாக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு அடுத்த மாதம் 9–ந்தேதி பதவி ஏற்க கூடும் எனத் தெரிகிறது. திருப்பதியில் பதவி ஏற்பு விழா நடத்த வேண்டும் என்று ஒரு சாராரும், விஜயவாடாவில் பதவி ஏற்பு விழா நடத்த வேண்டும் என்று இன்னொரு சாராரும் வற்புறுத்தி உள்ளனர்.

இரு வேறு கருத்துக்கள் நிலவுவதால் பதவி ஏற்கும் இடம் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. ஐதராபாத்தில் வருகிற 27, 28–ந்தேதிகளில் தெலுங்கு தேச மாநாடு நடக்கிறது. அதில் பதவி ஏற்கும் இடம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் சீமாந்திராவின் புதிய தலைநகரும் மாநாட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி