கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்… கோச்சடையான் பற்றி அவதூறு…

விளம்பரங்கள்

ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமதாஸ், ரவி, சூர்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

எங்கள் தலைவர் ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழ்ச்சியுடன் அனைத்து தியேட்டர்களிலும் பெண்களும், குழந்தைகளும் குதுகலத்துடன் படம் பார்ப்பதை நேரில் கண்டோம்.

கோச்சடையான்’ படத்துக்கு எதிராக சில விஷமிகள் அவதூறு பரப்பி வந்தனர். அவர்களின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளது. பொம்மை படம் என்றவர்களின் முகத்திரையும் கிழிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தடைகளையும் தாண்டி கோச்சடையான் வெளிவந்து வென்றுள்ளது. உலகம் முழுவதும் எங்கள் தலைவர் சிவதாண்டவம் ஆடுகிறார்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. மாறினால் நீ புனிதன். மாறாவிட்டால் கறைபடிந்த மனிதன்.

கோச்சடையான் படத்தில் அல்லும், பகலும் உழைத்தவர்களுக்கும், படத்தை பாராட்டியவர்களுக்கும், படத்தை வெற்றி படமாக்கிய உலக மக்களுக்கும் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படத்தை திருட்டு வி.சி.டி.யில் பரவாமல் தடுக்கவும், திருட்டு வி.சி.டி. விற்பவர்களை கையும் களவுமாக போலீசில் பிடித்து கொடுக்கவும் ரசிகர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி