“ஊர்வசி ஊர்வசி” பாடலை விற்பனை செய்த ஏ. ஆர். ரகுமான்…

விளம்பரங்கள்

அமெரிக்கா :- அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற ராப் பாடகர் வில்.ஐ.அம் அலைஸ் வில்லியம் ஆடம்ஸ். இவர் வெளியிடும் பாடல்களுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு இருக்கும். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த வில்.ஐ.அம் அலைஸ் வில்லியம் ஆடம்ஸ், கடந்த 1979ஆம் ஆண்டு பிறந்தவர். 39 வயதாகும் வில்.ஐ.அம் அலைஸ் வில்லியம் ஆடம்ஸ், இதுவரை பாடகர், பாடலாசிரியர், கம்போசர், பாடல் ரிக்கார்டு தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர், ராப் பாடகர், தொழிலதிபர் என பலவித அவதாரங்கள் எடுத்துள்ளார்.

இவர் தற்போது தான் புதியதாக அமைத்துக்கொண்டிருக்கும் பிறந்த நாள் ஆல்பத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் ஒன்றின் மெட்டில் ஒரு பாடல் பாட விரும்பியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் கம்போஸ் செய்த பாடல்களை வரிசையாக கேட்டுக்கொண்டிருந்த வில்.ஐ.அம் அலைஸ் வில்லியம் ஆடம்ஸ்க்கு இரண்டு பாடல்கள் மிகவும் கவர்ந்துவிட்டது. ஒன்று “காதலன்” படத்தில் இடம்பெற்ற “பேட்டை ராப்” என்ற பாடல், மற்றொன்று அதே படத்தில் இடம்பெற்ற “ஊர்வசி ஊர்வசி” என்ற பாடல்.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் அனுமதி பெற்று ஊர்வசி ஊர்வசி என்னும் பாடலை தனது ஆல்பத்தில் சேர்த்துவிட்டார் வில்.ஐ.அம் அலைஸ் வில்லியம் ஆடம்ஸ். அதுமட்டுமின்றி பிறந்த நாள் ஆல்பத்திற்காக ஊர்வசி பாடலை ஆங்கிலத்தில் பாடல் எழுதவும், இணை இசையமைப்பாளராக இருக்கவும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக ரஹ்மானுக்கு மிகப்பெரிய தொகை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதை ஏ.ஆர்.ரஹ்மானும் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். உலக அளவில் பிரபலமான ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் தான் பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: