செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு பழம்பெரும் கிரிக்கெட் வீரர் மாதவ் மந்திரி காலமானார் …

பழம்பெரும் கிரிக்கெட் வீரர் மாதவ் மந்திரி காலமானார் …

பழம்பெரும் கிரிக்கெட் வீரர் மாதவ் மந்திரி காலமானார் … post thumbnail image
மும்பை :- சுனில் கவாஸ்கரின் தாய்மாமாவான மாதவ் மந்திரிக்கு கடந்த மே 1ந் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை 7 மணியளவில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரரான மாதவ் மந்திரி வயது 92.

தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பருமான மாதவ் மந்திரி இந்திய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதே போல் இந்திய அணியின் தலைமை தேர்வாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 1988 முதல் 1992 ஆம் ஆண்டு வரை மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் மாதவ் மந்திரி பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி