செய்திகள்,முதன்மை செய்திகள் வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…

வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…

வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது… post thumbnail image
புதுடெல்லி:-வங்கக்கடலில் உருவான நில நடுக்கத்தால் வட மாநிலங்களில் நேற்று இரவு 9.50 மணிக்கு பூமி குலுங்கியது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்துக்கு 275 கி.மீ. கிழக்கில், கடல் மட்டத்துக்கு 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.இத்தகவலை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை டைரக்டர் ஜெனரல் எல்.எஸ்.ரத்தோர், புவி அறிவியல் அமைச்சக செயலாளர் சைலேஷ் நாயக் ஆகியோர் தெரிவித்தனர்.

நில நடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் குலுங்கின. ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் பூமி குலுங்கியது. மேற்கு வங்காள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்ததால், பொதுமக்கள் பீதி அடைந்தனர். டெல்லியில், நில நடுக்கம் 40 விநாடிகள் நீடித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. அங்கெல்லாம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் குவிந்தனர்.ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பிலும், இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. போலீஸ் குடியிருப்பு கட்டிடம் லேசாக குலுங்கியது.

சென்னை ஸ்டான்லி மகப்பேறு மருத்துவமனையில் உள்ள 8 மாடி கட்டிடத்தின் 5 மற்றும் 6வது மாடிகளில் உள்ள நோயாளிகள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறி, மருத்துவமனை கட்டிடத்தை விட்டு வெளியே வந்தனர். இதனையடுத்து கட்டிடத்தின் அனைத்து மாடிகளில் இருந்த நோயாளிகளும் வெளியே வந்து பீதியுடன் நின்றிருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நில நடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி