செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!… post thumbnail image
மொகாலி:-7வது ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.’டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், மனன்வோரா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள்.

முதல் ஓவரில் பிரவீன்குமார் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷேவாக், அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடித்து ஆடிய ஷேவாக் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். அடுத்து களம் கண்ட ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து சான்டோகி பந்து வீச்சில் பொல்லார்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஆடிய மனன்வோரா 36 ரன்னில் (34 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஸ்ரீரியாஸ் கோபால் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதே ஓவரில் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கும் மேக்ஸ்வேல் 3 பந்துகளில் 2 ரன் எடுத்த நிலையில் ஸ்ரீரியாஸ் கோபால் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார்

இதைத்தொடர்ந்து விரித்திமான் சஹா, கேப்டன் ஜார்ஜ் பெய்லியுடன் ஜோடி சேர்ந்தார். விரித்திமான் சஹா 3 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த அக்ஷர் பட்டேல் 6 ரன்னில் பிரவீன்குமார் பந்து வீச்சில் ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனை அடுத்து ரிஷி தவான், ஜார்ஜ் பெய்லியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி காட்டியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஜார்ஜ் பெய்லி 30 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் சேர்த்து ஜஸ்பிரித் பம்ரா பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் அம்பத்திராயுடுவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதே ஓவரில் ஹென்ரிக்ஸ் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் போல்டு ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. ரிஷி தவான் 9 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 14 ரன்னும், ஷிவம் ஷர்மா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஸ்ரீரியாஸ் கோபால், ஜஸ்பிரித் பம்ரா தலா 2 விக்கெட்டும், பிரவீன்குமார், சான்டோகி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மைக் ஹஸ்ஸி 6 ரன்னிலும், அம்பத்தி ராயுடு 17 ரன்னிலும், ரோகித் ஷர்மா 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் சிம்மோன்ஸ் 61 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் 100 ரன்னும், பொல்லார்ட் 6 பந்துகளில் ஒரு சிக்சருடன் 8 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். சிம்மோன்ஸ் அடித்த சதம் இந்த ஐ.பி.எல். தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதமாக பதிவானது. பஞ்சாப் அணி தரப்பில் ஹென்ரிக்ஸ், அக்ஷர் பட்டேல், ரிஷி தவான் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

KIN – Inning

Batsman R B M 4s 6s S/R
Sehwag V. run out Kumar P. 17 11 11 1 2 154.55
Vohra M. b Gopal S. 36 34 47 4 1 105.88
Marsh S. c Pollard K. b Santokie K. 30 17 31 2 2 176.47
Maxwell G. c & b Gopal S. 2 3 7 0 0 66.67
Bailey G. c Rayudu A. b Bumrah J. 39 30 41 2 2 130.00
Saha W. run out Rayudu A. 3 8 12 0 0 37.50
Patel A. c Sharma R. b Kumar P. 6 6 11 1 0 100.00
Dhawan R. not out 14 9 29 2 0 155.56
Hendricks B. b Bumrah J. 0 1 2 0 0 0
Sharma Sh. not out 1 1 11 0 0 100.00
Extras: (w 3, lb 5) 8
Total: (20 overs) 156 (7.8 runs per over)
Bowler O M R W E/R
Kumar P. 3.6 0 20 1 5.56
Santokie K. 3.6 0 40 1 11.11
Bumrah J. 3.6 0 31 2 8.61
Ojha P. 3.6 0 28 0 7.78
Gopal S. 3.6 0 32 2 8.89

MUM -Inning

Batsman R B M 4s 6s S/R
Hussey M. b Patel A. 4 7 35 0 0 57.14
Simmons L. not out 100 61 478 14 2 163.93
Rayudu A. c Sehwag V. b Dhawan R. 17 14 19 0 0 121.43
Sharma R. c Sharma Sa. b Hendricks B. 14 13 26 2 0 107.69
Pollard K. not out 8 6 398 0 1 133.33
Extras: (w 10) 10
Total: (19 overs) 159 (8.4 runs per over)
Bowler O M R W E/R
Patel A. 3.6 0 27 1 7.50
Dhawan R. 3.6 0 30 1 8.33
Hendricks B. 3.6 0 33 1 9.17
Sharma Sh. 3.6 0 32 0 8.89
Sharma Sa. 2.6 0 37 0 14.23

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி