400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் மரணம்!…

விளம்பரங்கள்

ஸ்ரீநகர்:-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. டிக்தோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மலைப்பாதையில் சென்ற போது திடீர் என்று நிலை தடுமாறி 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் 17 பேல் உடல் நசுங்கி பலியானார்கள். இவர்களில் 6 பேர் பெண்கள். 34 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவம் ரிசர்வ் போலீஸ் படை மற்றும் உள்ளூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் 17 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.பஸ்சில் சென்ற அனைவரும் குஜராத் மற்றும் பஞ்சாபை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள். வேலைக்காக இவர்கள் ஒப்பந்த முறையில் அழைத்துச் செல்லப்பட்ட போது விபத்தில் சிக்கி பலியானார்கள்.

உயிர் தப்பிய தொழிலாளர்கள் கூறும் போது, பஸ் டிரைவர் தூங்காமல் நீண்ட நேரம் பஸ்சை ஓட்டி வந்தார். அவரை தூங்கி ஓய்வு எடுக்குமாறு கூறினோம். ஆனால் அதை அவர் ஏற்காமல் தொடர்ந்து ஓட்டினார்.இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டது என்று தெரிவித்தனர். 17 பேர் பலியானதற்கு உதம்பூர் தொகுதி பா.ஜனதா எம்.பி ஜிதேந்திர சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மோடி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்துள்ளதால் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: