செய்திகள்,தொழில்நுட்பம் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து என்ஜினீயர் பலி!…

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து என்ஜினீயர் பலி!…

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து என்ஜினீயர் பலி!… post thumbnail image
நெய்வேலி:-நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 3 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முதல் அனல்மின் நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் மின் உற்பத்தி பணிகள் நடந்து கொண்டிருந்தன.

அதன் 7வது யூனிட்டுக்கு நீராவி கொண்டு செல்லும் குழாய் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் ஊழியர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் அந்த நீராவி குழாய் திடீரென வெடித்து சிதறியது. இதில் குழாய் செல்லும் பகுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இடிபாட்டில் சிக்கி முதன்மை மேலாளர் செல்வராஜ், அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, அபிஷேகம், ஊழியர் சிவலிங்கம் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதிகாரி செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தையடுத்து முதல் அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி