நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் வாழ்த்து!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று இருப்பதற்கு ரஷிய அதிபர் புதின் நேற்று வாழ்த்து தெரிவித்தார்.அவரது வாழ்த்து செய்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்பு ஆட்சியில் இருந்தபோதுதான் பல முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. ராஜ்ஜீய ரீதியில் ரஷியாவும், இந்தியாவும் கூட்டாக செய்து கொண்ட ஒப்பந்தங்களின் விளைவாக பொருளாதாரம், ராணுவ தொழில் நுட்பம், அறிவியல், கலாசாரம் மற்றும் மனித நேய உதவிகள் போன்றவற்றில் இரு நாடுகளுமே பயனை அடைந்துள்ளன.

நமது கூட்டு முயற்சி வரும் காலங்களில் முன்பைவிட இன்னும் சிறப்படையும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.இதேபோல் பிரதமர் பதவி ஏற்கவிருக்கும் மோடிக்கு கனடா நாட்டு பிரதமர் ஹார்பர் தொலை பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடி அவருக்கு நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே உறவை பலப்படுத்துவது தொடர்பாக அப்போது பேசப்பட்டதாக மோடி, டுவிட்டர் சமூக வலைத் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: