உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…

விளம்பரங்கள்

சென்னை:-‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அறிமுகமான உதயநிதி அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் அனைவருமே நல்ல அனுபவமுள்ள நடிகர்,நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சந்தானத்தை படம் முழுக்க தன்னுடன் வருவது போல் ஸ்கிரிப்ட் பண்ணியவர், கதாநாயகிக்கு நயன்தாராவை அழைத்தார்.

ஆனால், அவர் அப்போது நடிக்கிற மூடில் இல்லை என்று சொன்னதை அடுத்து ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தார். அப்படமும் ஹிட்டானது. அதனால் பின்னர் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர் இப்போது நண்பேன்டா படத்திலும் அவருடன் நடித்து வருகிறார்.இதையடுத்து அவர் நடிக்கும் படத்தில் லட்சுமிமேனன் நடிப்பதாகத்தான் இருந்தது.

ஆனால், அவருக்கு பெரிய பிஸ்னஸ் வேல்யூ இல்லாததால் முன்னணி நடிகையாக தேடி வந்த உதயநிதி இப்போது சமந்தாவிடம் பேசியிருக்கிறார். தற்போது விஜய், சூர்யா, விக்ரமுடன் நடித்து வரும் சமந்தா, உதயநிதி சிறிய ஹீரோ என்றபோதும், தனக்கான கேரக்டரும், கரன்சியும் வெயிட்டாக இருந்ததால் மறுபேச்சின்றி நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: