செய்திகள்,திரையுலகம் மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…

மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…

மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!… post thumbnail image
சென்னை:-சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர் என்று பாராட்டி ‘மீண்டும் ஒரு சுதந்திரம்‘ என்ற இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் ராகவா லாரன்ஸ்.

இந்த ஆல்பம் உருவாவதற்கு காரணமே, இதுவரை நமது இளைஞர்களுக்கு நாம் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டுமானால் செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியானதைப் பற்றி கூறுவது தான் வழக்கமாக இருந்தது. இனி இந்தியாவில் டீ விற்ற இளைஞனும் பிரதமராக முடியும் என்று நிரூபித்த நரேந்திர மோடியை நாம் இனி சுட்டிக் காட்டக் கூடிய தன்னம்பிக்கை சிகரமாக விளங்குபவர் நரேந்திர மோடி இதற்காகத் தான் இந்த இசை ஆல்பம்.

நான் எந்த ஒரு செயல்களை செய்தாலும் எனது குருநாதர் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றுத் தான் செய்வது வழக்கம். இந்த இசை ஆல்பமும் கே.பி. சாரிடம் ஆசி பெற்றே ஆரம்பிக்கப் பட்டுள்ளது.விரைவில் இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி