செய்திகள் மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!…

மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!…

மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!… post thumbnail image
கார்டோம்:-ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.

எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார்.இந்நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார். இதற்கிடையே இவர் மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது.

ஜோர்டான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மதம் மாறி திருமணம் செய்த மரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி