அரசியல்,செய்திகள்,திரையுலகம் மண்டியா தொகுதியில் நடிகை ரம்யா தோல்வி!…

மண்டியா தொகுதியில் நடிகை ரம்யா தோல்வி!…

மண்டியா தொகுதியில் நடிகை ரம்யா தோல்வி!… post thumbnail image
பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மண்டியா பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை ரம்யா போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் சி.எஸ்.புட்டராஜூ, பா.ஜனதா சார்பில் பேராசிரியர் சிவலிங்கய்யா ஆகியோர் களம் கண்டனர்.

இந்த தேர்தலில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 370 வாக்குகள் பெற்று புட்டராஜூ வெற்றி பெற்றார். ரம்யாவுக்கு 5 லட்சத்து 18 ஆயிரத்து 852 வாக்குகள் கிடைத்தன. பா.ஜனதா வேட்பாளர் சிவலிங்கய்யா 86 ஆயிரத்து 993 வாக்குகள் பெற்று இருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி