செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!…

உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!…

உலகின் விலையுயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்!… post thumbnail image
நியூயார்க்:-உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது.

4 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் 27 மாடிகளை கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான ‘அண்டிலியா’ வின் பெயரை சூட்டியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 1 லிருந்து 2 பில்லியன் டாலர் வரை இருக்கும் என ‘போர்ப்ஸ்’ மதிப்பிட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடியாகும்.

27 மாடிகள் கொண்ட அண்டிலியாவில் 6 மாடிகள் கார்பார்க்கிங் வசதிக்காகவும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகர கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அண்டிலியா 8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி