‘கோச்சடையான்’ டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்!..

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் கடந்த 9ம் தேதி வெளிவர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் வெளியீடு வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் படம் வருமா என்று சந்தேகங்கள் கிளப்பப்பட்டது.

ஆனால் தயாரிப்பு தரப்பில் வெளியான அறிக்கையில் கோச்சடையான் 3டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில்நுட்ப காரணக்களுக்காக தேதியை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இப்படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 3டி வடிவத்தில் தயாரான படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. 23ம் தேதி படம் உறுதியாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை துவங்குகிறது.தமிழ்நாட்டில் மட்டும் 450 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்கனவே 4 ஆயிரம் தியேட்டர்களில் இப்படத்தை திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தன. தற்போது மேலும் 2 ஆயிரம் தியேட்டர்களில் படம் திரையிடப்பட உள்ளது. மொத்தம் 6 ஆயிரம் தியேட்டர்களில் வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: