இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்த ‘மரண அடி’யை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார்.

முன்னதாக, மத்திய மந்திரிசபையின் கடைசி சம்பிரதாய கூட்டத்தை கூட்டும் மன்மோகன் சிங் ராஜினாமாவுக்குப் பின்னர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியப் பிறகு தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை மன்மோகன் சிங் காலி செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: