செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தற்காலிக நிறுத்தம்!…

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தற்காலிக நிறுத்தம்!…

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தற்காலிக நிறுத்தம்!… post thumbnail image
பெர்த்:-மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.370 ரக விமானம் மாயமானது.விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்க கூடும் என செயற்கைக்கோள் வழியே கிடைத்த தகவலை தொடர்ந்து அதனை தேடும் பணியில் ஆஸ்திரேலிய குழு ஒன்று ஈடுபட்டு வருகிறது.

அந்நாட்டின் முன்னாள் விமான படை தளபதியான ஆங்கஸ் ஹூஸ்டன் தலைமையிலான தேடுதல் பணி குழுவினரின் தேடுதலில் விமானத்தின் சிதைவு பாகங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.அதற்கு உறுதுணையாக நீர்மூழ்கி புளூபின் 21 பயன்படுத்தப்பட்டது.இந்நிலையில் தேடுதல் பணியில் பாதிப்பு ஏற்படும் வகையில் நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு சாதனம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனையை ஆய்வு செய்தபோது ஓசன் ஷீல்டில் உள்ள டிரான்ஸ்பாண்டருக்கான வன்பொருள் பாதிப்பு மற்றும் புளூபின் 21 நீர்மூழ்கி ஆகியவற்றில் உள்ள டிரான்ஸ்பாண்டர் பாதிப்பு ஆகியன கண்டறியப்பட்டது என மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு கருவிகளும் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி