செய்திகள்,திரையுலகம் தனுஷ் படத்தில் நடிக்கும் 6 இயக்குனர்கள்!…

தனுஷ் படத்தில் நடிக்கும் 6 இயக்குனர்கள்!…

தனுஷ் படத்தில் நடிக்கும் 6 இயக்குனர்கள்!… post thumbnail image
சென்னை:-‘ராஞ்சனா’ ஹிட்டுக்கு பிறகு தனுஷ் ஆர்.பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.ஹீரோயின் அக்ஷரா ஹாசன். தனுஷ் காது கேளாத வாய்பேச முடியாத இளைஞனாக நடிக்கிறார். அவருக்கு நம்பிக்கையூட்டி பெரிய ஆளாக்கும் கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இந்தியில் முக்கிய இயக்குனர்களான ராஜ்குமார் ஹிரானி, ராகேஷ் ஓம்பிரகாஷ், காஷ் மெஹ்ரா, கரண் ஜோஹர், அனுராக் பாஷூ, கவுரி ஷிண்டே ஆகிய 6 இயக்குனர்கள் நடிக்கிறார்கள்.கதைப்படி தனுஷ், படிப்படியாக வளர்ந்து சினிமா நடிகராவார். அவரை இயக்கும் இயக்குனர்களாக இவர்கள் நடிக்கிறார்கள். இந்தியில் 6 இயக்குனர்கள் ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி