செய்திகள்,திரையுலகம் ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாக தொடங்கப்பட்டதா லிங்கா?…

ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாக தொடங்கப்பட்டதா லிங்கா?…

ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாக தொடங்கப்பட்டதா லிங்கா?… post thumbnail image
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படம் மே 2ம் தேதி மைசூர், சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து மைசூர் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. அங்குள்ள கன்னட அமைப்புகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது.

லிங்கா படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான சோனாக்ஷி சின்ஹா கலந்து கொண்டு ரஜினி உடன் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சுறுசுறுப்புக்கு பேர்போனவர். திட்டமிட்டபடி பரபரவென காட்சிகளைப் படமாக்கி திட்டமிட்டபடியே முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் என்று ஒரு சாரர் சொல்கின்றனர்.

மைசூரில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் அல்லது மும்பையில் தொடங்கப்படுமாம்.அதில் அனுஷ்கா கலந்து கொள்வார் என்று கூறுகின்றனர்.இதற்கிடையில் லிங்கா படத்தின் முழு திரைக்கதையும் இன்னும் ரெடியாகவில்லை. ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாகவே லிங்கா படத்தின் படப்பிடிப்பை மே 2ம் தேதி துவங்கினார்கள். அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லை. முழு திரைக்கதையும் ரெடியாகி ரஜினி ஓகே சொன்ன பிறகுதான் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி