செய்திகள்,திரையுலகம் கொரிய மொழியில் டப் செய்யப்படும் ‘குக்கூ’ திரைப்படம்!…

கொரிய மொழியில் டப் செய்யப்படும் ‘குக்கூ’ திரைப்படம்!…

கொரிய மொழியில் டப் செய்யப்படும் ‘குக்கூ’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நாயர் நடித்து வெளியான படம் ‘குக்கூ‘. பார்வையற்றவர்களின் கண்ணியமான காதலைச் சொன்ன இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியிலும் லாபம் சம்பாதித்தது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஃபாக்ஸ் ஸ்டாருன் இணைந்து தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் இப்படத்தைத் தயாரித்தது.தற்போது இப்படம் கொரிய மொழியில் டப் செய்யப்பட்டு அதே பெயரில் வெளியாகப் போகிறது. கொரிய மொழிக்காக படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி